ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொண்டால் நல்லது - ஹெச். ராஜா

”தயாநிதிமாறன், ஆர்.எஸ் பாரதி இருவரையும் குண்டாஸில் கைது செய்ய வேண்டும்”

ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொண்டால் நல்லது - ஹெச். ராஜா
ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொண்டால் நல்லது - ஹெச். ராஜா
  • Share this:
ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொண்டால் நல்லது ஏனென்றால் முரசொலி அலுவலகம் மூலப்பத்திரம் பிரச்சனை உள்ளது என ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

ஸ்டாலினுக்கு பட்டியல் சமூகத்தின் மீது நவீன தீண்டாமை உள்ளது. திமுக தமிழகத்தை பிடித்த கொரோனா வைரஸ். இதை முழுமையாக அழித்து ஒழிக்காமல், தமிழகத்தில் எந்த சமுதாயமும் மரியாதையாக நடமாட முடியாது அவ்வளவு மோசமான தீயசக்திகள்.


ALSO READ :  சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இதுதான் வழி...! சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

பட்டியல் சமூகத்தைப் பற்றி ஆர்.எஸ். பாரதி பேசியதாக நான் நினைக்கவில்லை. திமுக, திக நீதிக்கட்சியின் டி.என்.ஏ-வில் பட்டியல் சமூகத்தின் விரோதப் போக்கு இருக்கின்றது.

தயாநிதிமாறன், ஆர் எஸ் பாரதி இருவரையும் குண்டாஸில் கைது செய்ய வேண்டும். திமுக-வின் ஒன்றிணைவோம் வா ஒரு பப்ளிசிட்டி. பிரதமரை பற்றி அவதூறு பேசினால் அவர்களுக்கு புரியும் பாசையில் அதே மாதிரி திருப்பி அடிப்போம்.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். நல்ல முடிவு விரைவில் எடுப்பார்கள் என தெரிவித்தார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading