Home /News /tamil-nadu /

மாட்டுப் பொங்கல் கொண்டாடிய ஹெச்.ராஜா- புகைப்படத்துடன் வாழ்த்துகள் பகிர்வு

மாட்டுப் பொங்கல் கொண்டாடிய ஹெச்.ராஜா- புகைப்படத்துடன் வாழ்த்துகள் பகிர்வு

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா மாட்டுப் பொங்கல் கொண்டாடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாயத்தில் உழவர்களுக்கு பக்கபலமாக நின்ற மற்ற உயிரினங்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, குறிப்பாக கால்நடைகளை வழிபடும் பொருட்டு கொண்டாடப்படுவதே இந்த மாட்டுப் பொங்கலின் சிறப்பு அம்சமாகும். தமிழர் திருநாளாம் பொங்கல் விழா என்பது உழவையும் உழவர்களையும் சிறப்பு செய்வதே ஆகும். உழவை பூர்வீகமாக கொண்ட தமிழ்ச் சமூகத்தில் கால்நடைகள் பங்கு மிக முக்கியமானதாக இருந்துள்ளது.

    ஆடு, கோழி, நாய் என்று அனைத்து மனித வாழ்வுக்கு பயன்பட்டாலும் விவசாயப் பணியில் மாட்டின் பங்கு இன்றியமையாத ஒன்று ஆகும். அதனால், பொங்கல் பண்டிகையுடன் சேர்த்து உழவுக்கு உதவும் மாடுகளை சிறப்பிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. நகரங்களை விட கிராமப் புறங்களில் மாட்டுப் பொங்கல் மிகவும் சிறப்பாக கொண்டாப்பட்டுவருகின்றன.


    இந்தநிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா மாட்டுப் பொங்கல் கொண்டாடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவருடைய ட்விட்டர் பதிவில், ‘நமக்கு விவசாயத்தில் உதவியாக இருக்கின்ற கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. உழவனின் நண்பன் கால்நடைகளுக்கு நாம் நன்றியினை செலுத்திக் கொள்கிறோம். இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: HRaja, Pongal

    அடுத்த செய்தி