பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஜிம்னாஸ்டிக் ஆசிரியர் கைது

சென்னையில ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயிற்சி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயிற்சிக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஜிம்னாஸ்டிக் ஆசிரியர் கைது
கைதானவர்
  • Share this:
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூர் உத்தண்டி அருகே பங்களா வீட்டில் வசித்து வருபவர் பிரபல தொழிலதிபர். அவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலம் கடந்த 10-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் தனது 13 வயது மகள், நாவலூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருவதாக கூறியுள்ளார். மேலும் அவரது மகள் மாநில அளவில் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக திகழ்ந்து வருதாக தெரிவித்திருந்தார்.

தொடர்ச்சியாக பயிற்சி பெற்று வந்த அவர், கொரோனா ஊரடங்கால் பயிற்சி பெற முடியாமல் இருந்துள்ளார். வீட்டிலேயே தானாக பயிற்சி எடுத்து வந்தார். மேலும் அவர் மன அழுத்ததை குறைக்கும் பயிற்சியையும் மேற்கொண்டு வந்தார். அதுவும் ஊரடங்கால் தடை பட்டது.


மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சியையாவது, பயிற்சியாளரை வைத்து தொடர்ந்து கொடுக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதை அடுத்து திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 42 வயதான மகேஷ் என்பவரை தனது மகளுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சி அளிக்க அமர்த்தினர்.

உத்தண்டி அருகே உள்ள சிறுமி வீட்டிற்கு தினமும் சென்று மகேஷ் பயிற்சி அளித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி சிறுமிக்கு ரிலாக்சேஷன் உடற்பயிற்சியை மகேஷ் அளித்துள்ளார்.

அப்போது, சற்று உறக்க நிலைக்கு சிறுமி சென்றதை அடுத்து, அவருக்கு மகேஷ் பாலியல் தொந்தரவு கொடுக்கத் தொடங்கியுள்ளார். திடுக்கிட்டு எழுந்த சிறுமி, பயிற்சியாளர் மகேஷின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தியுள்ளார்.சிறுமியின் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் பணியாளர்கள் பயிற்சி நடைபெற்ற இடத்திற்கு ஓடினர். அவர்களை பார்த்ததும் மகேஷ் அங்கிருந்து வெளியேறி, தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார்.

Also read... மதுகுடிப்பதைத் தடுத்த மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலைசெய்ய முயன்றவர் கைது..

இதனால் பயிற்சியாளர் மகேஷை கைது செய்து, இது போல் எத்தனை சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலதிபர் அந்த புகாரில் கேட்டுக்கொண்டார்.

தொழிலதிபரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த மகேஷை திங்கட்கிழமை கைது செய்தனர். அவர் மீது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading