தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்க அனுமதி - முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களை ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் திறக்க முதல்வர் பழனிசாமி அனுமதி வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்க அனுமதி - முதல்வர் பழனிசாமி
கோப்பு படம்
  • Share this:
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர் சங்கத்தினர் சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சி கூடங்களை திறக்க வேண்டுமென முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று முதல்வர் பழனிசாமி ஆணை பிறப்பதித்துள்ளார்.

மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தனியார் உடற்பயிற்சிக் கூடங்கள், 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் தனியாக வெளியிடப்படும்.
அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading