ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.12 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களையும், லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், வாகனங்களில் கடத்தி செல்வதாகவும், மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சுங்கச்சாவடிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் வந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். உடனே லாரியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். லாரியை சோதனை செய்த போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களையும், மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பறிமுதல் செய்த லாரி கடலூர் மணவேளி பகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கடத்தல் சம்பவம் குறித்து ஸ்ரீ பெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியில் கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்கள் கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரபட்டதா அல்லது ஏதேனும் குடோனில் பதுக்கி வைப்பதற்காக கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gutkha seized, Kanchipuram, Rs 12 lakh worth Gutkha, Sriperumbudur toll booth