குட்கா லஞ்ச வழக்கு - அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சிபிஐ முன் ஆஜர்

குட்கா ஊழல் முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: December 7, 2018, 11:21 AM IST
குட்கா லஞ்ச வழக்கு - அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சிபிஐ முன் ஆஜர்
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
Web Desk | news18
Updated: December 7, 2018, 11:21 AM IST
தமிழகத்தில் பூதாகரத்தை எடுத்துள்ள குட்கா ஊழல் விவகாரத்தில் பல்வேறு பெரும் புள்ளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக அமைச்சர் விஜய பாஸ்கரின் உதவியாளர் சரவணன் நேரில் ஆஜராகியுள்ளார்.

தமிழகத்தில் 2013 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தடை செய்யப்பட்ட குட்கா விவகாரத்தில் மீண்டும் தமிழகம் முழுவதும் கோடி கணக்கில் சந்தையில் விற்பனையானது. இதில் முக்கியமாக நெற்குன்றம் மாதவராவ் குடோனில் பறிமுதல் செய்யப்பட்டது.

அங்கு வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ நடத்திய சோதனையில் தமிழகத்தின் முக்கிய புள்ளிகளான அப்போதைய பொதுபணித்துறை அமைச்சர் ஓ.பி.எஸ், அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., டி.கே ராஜேந்திரன், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோரின் பெயர் இருந்தாக டைரி கைபற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து எதிர்கட்சியான திமுக இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து சி.பி.ஐ க்கு மாற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்தது. இதனால் இந்த வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன் பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ. கையிலெடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மாதவராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சி.பி.ஐ.யின் விசாரணை வட்டத்துக்குள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஜார்ஜ், டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளிட்ட பலரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

இதன் அடுத்தக்கட்டமாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜெயகுமார், ஆய்வாளர் மன்னர் மன்னன், ஆய்வாளர் சம்பத் ஆகியோர், சி.பி.ஐ அலுவலகத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டு நேரில் வரவழைக்கப்பட்டு இரண்டு நாட்கள் விசாரணைக்கு உடப்படுத்த பட்டனர்.
Loading...
அதன் தொடர்ச்சியாக அடுத்தகட்டமாக அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சரவணனுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பட்டு ஆஜராகாத நிலையில் இன்று கட்டாயமாக ஆஜராக சி.பி.ஐ நேற்று சம்மன் அனுபியது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை சாஸ்திரிபவன் சி.பி.ஐ அலுவகத்தில் ஆஜராகியுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. இதன் அடுத்த கட்ட நிலவரம் இன்று மாலை தெரிய வரும்.

Also See..

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்