Home /News /tamil-nadu /

"குட்கா ஊழலில் முதலமைச்சர், பாஜக அரசு கூட்டணி" - திமுக தலைவர் ஸ்டாலின் சாடல்

"குட்கா ஊழலில் முதலமைச்சர், பாஜக அரசு கூட்டணி" - திமுக தலைவர் ஸ்டாலின் சாடல்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

குட்கா ஊழலில் முதலமைச்சர், பாஜக அரசு கூட்டணி வைத்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

    குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை முதலமைச்சரும், மத்திய பாஜக அரசும் வரிந்துகட்டிக்கொண்டு காப்பாற்றுவதில் உள்ள அறிவிக்கப்படாத கூட்டணி என்ன என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்கா ஊழல் தொடர்பாக வருமான வரித்துறை தலைமைச் செயலாளரிடம் கொடுத்த கோப்புகள் காணவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். குட்கா ஊழல் தொடர்பாக விசாரித்த அதிகாரி திடீர் மாற்றம், சிபிஐ விசாரணையில் காலதாமதம் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



    சிபிஐ மயான அமைதி காப்பதாக விமர்சித்துள்ள ஸ்டாலின், குட்கா மோசடி குறித்த வழக்கில் சிபிஐ ஆமை வேகத்தில்கூட நகர மறுப்பதாகவும் சாடியுள்ளார். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி.ராஜேந்திரன் ஆகியோரை நெருங்க விடாமல் சி.பி.ஐயைத் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Dmk leader mk stalin, Gutkha Scam

    அடுத்த செய்தி