குட்கா ஊழல் முறைகேடு: விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாருக்கு சிபிஐ சம்மன்

சட்டவிரோதமாக குட்கா புழக்கத்தில் விடப்பட்டதாக புகார் எழுந்த காலகட்டத்தில் சென்னை மாநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பணியாற்றிய ஜெயக்குமார் மீதும் விமர்சனங்கள் எழுந்தன.

news18
Updated: October 11, 2018, 2:42 PM IST
குட்கா ஊழல் முறைகேடு: விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாருக்கு சிபிஐ சம்மன்
விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார்
news18
Updated: October 11, 2018, 2:42 PM IST
குட்கா புகார் தொடர்பாக விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சிபிஐ அலுவலகத்தில் இன்று  ஆஜராகிறார்.

குட்கா புகார் தொடர்பாக சென்னை செங்குன்றத்தில் உள்ள எம்.டி.எம் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர். இதையடுத்துது, குடோன் அதிபர்கள், அதிகாரிகள் என 6 பேரை கைது செய்தனர். அத்துடன்,  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி.,  டி.கே ராஜேந்திரன், முன்னாள் டி.ஜி.பி. ஜார்ஜ் ஆகியோரது வீடுகளிலிலும் சோதனை மேற்கொண்டு, வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர்.

மேலும் சட்டவிரோதமாக குட்கா புழக்கத்தில் விடப்பட்டதாக புகார் எழுந்த காலகட்டத்தில் சென்னை மாநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பணியாற்றிய ஜெயக்குமார் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவகாரம் அம்பலமானதும், செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனில் விசாரணை மேற்கொண்ட ஜெயக்குமார் குட்கா ஊழல் தொடர்பான தகவலை தனக்கு தரவில்லை என்று முன்னாள் ஆணையர் ஜார்ஜ் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஜெயக்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்நிலையில், நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் அவர் இன்று ஆஜராகிறார்.

ALSO READ...

துணிந்து சொல்

குட்கா நிறுவன அதிபருக்கு சிபிஐ கிடுக்கிபிடி: சூடு பிடிக்கும் விசாரணை
First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...