குட்கா லஞ்ச வழக்கு - அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சிபிஐ சம்மன்

குட்கா விவகாரத்தை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து கையில் எடுத்த சிபிஐ, குட்கா ஆலை உரிமையாளர் மாதவ் ராவ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

Web Desk | news18
Updated: December 6, 2018, 9:23 AM IST
குட்கா லஞ்ச வழக்கு - அமைச்சர் விஜய பாஸ்கருக்கு சிபிஐ சம்மன்
அமைச்சர் விஜயபாஸ்கர்
Web Desk | news18
Updated: December 6, 2018, 9:23 AM IST
குட்கா லஞ்ச வழக்கில் அமைச்சர் விஜய பாஸ்கர் நாளை ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை முறைகேடாக விற்ற விவகாரத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ் ஆகியோருக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக டைரி ஒன்று சிக்கியது.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள், குட்கா ஆலை உரிமையாளர் மாதவ் ராவ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ இன்று அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

விஜய பாஸ்கரின் உதவியாளருக்கும் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பபட்டுள்ளது.

Also See..

First published: December 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்