MADURAI GUTKA SMUGGLING FROM BANGALORE NOTICE TO KPN COMPANY IN MADURAI VAI STA
பெங்களூருவில் இருந்து கட்டுக்கட்டாக பார்சலில் வந்த குட்கா.. பிரபல கே.பி.என் ட்ராவல்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்..
பெங்களூருவில் இருந்து கட்டு கட்டாக வந்த குட்கா பறிமுதல்
பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கட்டுக்கட்டாக குட்கா பார்சல்களை ஏற்றி வந்த பிரபல கே.பி.என் நிறுவனத்திற்கு மதுரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மதுரையை மையமாக வைத்து தென்மாவட்டம் முழுவதும் தாராளமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. தடையை மீறி பல்வேறு வழிகளில் பெங்களூர் மற்றும் டெல்லியில் இருந்து குட்கா தமிழகம் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக பெங்களூருவில் இருந்து அதிக அளவில் குட்கா வருவது தெரியவந்த நிலையில், எங்கிருந்து இவை வருகிறது என்பது குறித்து மதுரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் பிரபலமான கே.பி.என், டிராவல்ஸ் நிறுவனத்தின் பார்சல் சர்வீஸ் மூலம் மதுரைக்கு குட்கா வந்தது கையும் களவுமாக பிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முரண்பாடான தகவல் வந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கே.பி.என் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.