குட்கா லஞ்ச முறைகேடு வழக்கில் தற்போது தேர்தல் டிஜிபியாக உள்ள அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த அசுதோஷ் சுக்லா, குட்கா தயாரிப்பாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வருமானவரித்துறையினரின் சோதனையில் சிக்கிய சேகர் ரெட்டியின் டைரியில் இது தொடர்பான குறிப்புகள் இருந்தன. அதனடிப்படையில் தற்போது தேர்தல் டிஜிபியாக இருக்கும் அசுதோஷ் சுக்லாவிற்கு கடந்த மாதம் சிபிஐ சம்மன் அனுப்பியது.
ஆனால், அவர் ஆஜராகாததால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஐ எச்சரித்தது. இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சுக்லா விசாரணைக்கு ஆஜராகியதாக டெல்லி சிபிஐ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Also Watch
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.