குட்கா ஊழல் முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மற்றொரு உதவியாளர் வீடு உட்பட சென்னையில் 3 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.
சென்னை செங்குன்றத்தில் உள்ள மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா குடோன் மற்றும் அவரது வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கைப்பற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருடைய உதவியாளர் சரவணன் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து 3-நாளாக நடந்த விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர்
அத்துடன், விஜயபாஸ்கரின் மற்றொரு உதவியாளரான சீனிவாசனின் வீடு உட்பட சென்னையில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல, குட்கா வழக்கில் ஜாமினில் வெளிவந்த ஒருவருக்காக ஆஜரான வழக்கறிஞர் வேலுகார்த்திகேயனுக்கு சொந்தமான தஞ்சை வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Also see... காமராஜருக்கு ஆதரவாகவே எம்.ஜி.ஆர்-ஐ சுட்டாரா எம்.ஆர்.ராதா?
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.