குட்கா விவகாரம்: உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

மு.க.ஸ்டாலின்

சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏ.க்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

 • Share this:
  கடந்த 2017-ம் ஆண்டில் தடைசெய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.க்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சாஹி தலைமையிலான அமர்வு, திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டது.

  அதன்பிறகு, கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு, திமுக, எம்எல்ஏக்களுக்கு 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்தும் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உரிமை மீறல் நோட்டீஸ் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதனை எதிர்த்து சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

  சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்திற்காக மட்டுமே, உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல், உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியதாகவும், தேவைப்பட்டால் புதிதாக உரிமைக் குழு அமைத்துக் கொள்ளட்டும் என்றும் திமுக தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், பேச்சுரிமை என்ற போர்வையில் தடை செய்யப்பட்ட பொருளை ஊக்குவிக்கும் வகையில் திமுக எம்.எல்.ஏ.,க்கள் செயல்பட்டதாக உரிமை குழு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

  மேலும் படிக்க...பயிர்க்கடன் தள்ளுபடி செய்யததற்கான ரசீது 15 நாட்களுக்குள் வழங்கப்படும்

  உரிமைக் குழு பரிந்துரை மீது சட்டப்பேரவை இறுதி முடிவெடுத்து, அதனை எதிர்த்து வழக்கு தொடரும்பட்சத்தில் தான் நீதிமன்றம் தலையிட முடியும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இருதரப்பினர் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்க உள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: