Home /News /tamil-nadu /

குட்கா விவகாரம்: 3-வது நாளாக இன்றும் விஜயபாஸ்கரிடம் சிபிஐ விசாரணை

குட்கா விவகாரம்: 3-வது நாளாக இன்றும் விஜயபாஸ்கரிடம் சிபிஐ விசாரணை

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதற்கு லஞ்சம் வழங்கியதாக, குட்கா நிறுவன அதிபர் மாதவராவ் உள்ளிட்ட ஆறு பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
குட்கா லஞ்ச புகார் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 3-வது நாளாக இன்றும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

சென்னை செங்குன்றத்தில் உள்ள மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா குடோன் மற்றும் அவரது வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கைப்பற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இவ்வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

Gutkha | குட்கா பொருட்கள்
குட்கா பொருட்கள்

இதில் குட்கா நிறுவன அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் காலத்தில் வணிகவரித்துறை அமைச்சராக இருந்த பி.வி.ரமணா, தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருடைய உதவியாளர் சரவணன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 15-ம் தேதி விசாரணையை தொடங்கினர்.

2- வது நாளாக நேற்றும் இவர்கள் ஆஜராகினர். இதில், விஜயபாஸ்கரிடம் காலை 11 மணி முதல் தொடர்ந்து 9 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதைதொடர்ந்து 3 நாளான இன்றும், அமைச்சர் விஜயபாஸ்கர் அவரின் உதவியாளர் சரவணன் மற்றும் ரமணாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see... தும்பிக்கையால் மவுத் ஆர்கன் வாசிக்கும் யானை
Published by:Vaijayanthi S
First published:

Tags: Gutkha Scam, Vijaya Baskar

அடுத்த செய்தி