Home /News /tamil-nadu /

குருப்பெயர்ச்சி: சென்னை குருபகவான் கோயிலில் சிறப்பு வழிபாடு - சிறப்பு நேரலை

குருப்பெயர்ச்சி: சென்னை குருபகவான் கோயிலில் சிறப்பு வழிபாடு - சிறப்பு நேரலை

திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில்

திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில்

 திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில் நடைபெறும் சிறப்பு பூஜைகளை கோவில் நிர்வாகம் நேரலையாக ஒளிபரப்புகிறது.

    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, சென்னை பாடியில் அமைந்துள்ள குரு பகவான் சிறப்பு வழிபாட்டு ஸ்தலமான திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதனை வீட்டிலிருந்தபடியே நேரலையாக காணும் வகையில் யூடியூபில் நேரலை செய்யப்படுகிறது.

    ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைவார். அதேபோல் இந்தாண்டு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.

    வாக்கியப்பஞ்சாங்கப்படி இன்று (நவ 13) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. மகர ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் கும்ப ராசிக்கு மாலை 6 மணிக்கு மேல் இடப்பெயர்ச்சியாகிறார். குருபகவான் கும்ப ராசியில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்வார். திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் கார்த்திகை மாதம் 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதியன்று சனிக்கிழமையன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.

    குரு பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெறுகின்றன.  குறிப்பாக குரு பரிகார ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அதன்படி சென்னை பாடியில் அமைந்துள்ள குரு பகவான் சிறப்பு வழிபாட்டு ஸ்தலமான திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில் இன்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.  இந்த ஆலயத்தில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த நிலையில் வலது புறமாக தலையை சாய்த்த நிலையில் இறைவன் அருள்பாலிக்கின்றார்.

    இந்நிலையில் திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில் நடைபெறும் சிறப்பு பூஜைகளை கோவில் நிர்வாகம் நேரலையாக ஒளிபரப்புகிறது.



    நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு.

    குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.
    Published by:Arun
    First published:

    Tags: Gurupeyarchi, Gurupeyarchi 2021

    அடுத்த செய்தி