குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் வக்ர கதியை கணக்கில் கொண்டே, ஒவ்வொரு ராசிக்கும் பலன்களை அறிய வேண்டும். அந்த வகையில், கும்ப ராசிக்கு அதிசாரமாக வந்துள்ள குரு, தற்போது வக்கிரம் அடைந்துள்ளார். ஜென்மத்தில் இருக்கும் குரு, பனிரண்டாம் இடத்தில் இருக்கும் சனி ஆகிய இரண்டு கிரகங்கலுமே, கும்ப ராசிக்கு நன்மைகளை வழங்கும் நிலையில் இல்லை. ஆனால், தற்போது இரண்டு கிரகங்களும் வக்கிரம் அடைந்துள்ளதால், நிச்சயம் நல்ல பலன்களை வழங்குவார்கள்.
அதன்படி, ஜென்மராசியில் இருக்கும் குரு, சிறையில் இருப்பது போன்ற மனநிலையை உருவாக்கி இருப்பார். சிலர் உறவுகளை விட்டு கூட ஒதுங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், தற்போது குரு வக்கிரம் அடைவதால், அந்த நிலை மாறும். தனிமையில் ஒதுங்கி இருந்த பலரும், மற்றவர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைக்கும்.
உடலையும் மனதையும் வாட்டி வதைத்த, விரக்தியான சிந்தனைகள் மாறி, மனம் சுந்தந்திரமாக இயங்கும். பாரம் குறைந்தது போல நீங்கள் உணருவீர்கள். குருவின் ஐந்தாம் பார்வை, ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு கிடைப்பதால், குழந்தைகள் வழியில் இருந்த அதிருப்தி மாறும். குழந்தைகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீக உறவுகளால் மன நிம்மதி அடைவீர்கள். மனதில் இருந்த விரதியான சிந்தனை அகன்று புதிய தன்னம்பிக்கை கிடைக்கும்.
குருவின் ஏழாம் பார்வை ராசியின் ஏழாம் இடத்திற்கு கிடைப்பதால், தடைபட்ட திருமணங்கள் இனி நல்லபடியாக நடக்கும். கணவன் மனைவி இடையிலான உறவு சீர்படும். நட்பு வட்டம் மீண்டும் களைகட்டும். குருவின் ஒன்பதாம் பார்வை, ராசியின் ஒன்பதாம் இடத்திற்கு கிடைப்பதால், தந்தை வழியில் நல்ல ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களும் சிலருக்கு கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வக்கிர குருவை போல, வக்கிர சனியின் பலன்களை அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
அதன்படி, கும்ப ராசிக்கு பனிரண்டாம் இடத்தில் இருக்கும் சனி, இது வரை பல விரயங்களை ஏற்படுத்தி இருப்பார். இருந்த கொஞ்சநஞ்ச சேமிப்புகளையும் கரைத்து இருப்பார். அப்படி சேமிப்புகள் கரைந்து இருந்தால், மீண்டும் சேமிப்பு உருவாகும். ஆக்கப்பூர்வமான முதலீடுகளுக்கும் அது பயன்படும்.
நல்ல உணவு மற்றும் உறக்கத்தை மறந்தவர்களுக்கு, அது மீண்டும் கிடைக்கும். தடைபட்ட தூரதேச பயணங்கள் மீண்டும் தொடங்கும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் வீடு திரும்புவார்கள்.
சனியின் மூன்றாம் பார்வை, ராசியின் இரண்டாம் இடத்தில் விழுவதால், இதுவரை குடும்பத்தில் இருந்த வெறுப்பு நீங்கி, மகிழ்ச்சி பிறக்கும். குடும்ப உறவுகளிடம் இணக்கமான உறவு அமையும். தடைபட்ட வருமானம் மீண்டும் கிடைக்கும். புதிய பொருட்கள் வீட்டுக்கு வந்து சேரும்.
சனியின் ஏழாம் பார்வை, ராசிக்கு ஆறாம் வீட்டுக்கு கிடைப்பதால், அடைபடாத கடன்கள் அடைபட வாய்ப்பு கிடைக்கும். தீராத நோய்கள் தீரும். தொல்லை தந்து கொண்டிருப்பவர்கள் அடங்கி போவார்கள். வேலை மற்றும் தொழில் ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறைய தொடங்கும்.
சனியின் பத்தாம் பார்வை, ஒன்பதாம் வீட்டுக்கு கிடைப்பதால், தந்தை மற்றும் பூர்வீக வழியில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். தடைபட்ட ஆன்மீக பயணங்கள் மீண்டும் தொடங்கும். தடைபட்ட, கால தாமதமான வெளிநாட்டு படிப்புகளை தொடங்க வாய்ப்புகள் அமையும்.
மேலும் படிக்க...
குரு பெயர்ச்சி பலன்கள் 2021: 12 ராசிகளுக்கான பொது பலன்கள்
குரு பெயர்ச்சி 2021: குரு பெயர்ச்சியின் இறுதி நிலையில் இந்த ராசியினர் பலவித பலன்களை பெறுவர்..
இதுவரை, கோச்சார குரு மற்றும் சனியால் பாதிப்புகளை சந்தித்து இருந்தால், அது வக்கிர குரு மற்றும் வக்கிர சனியால், முடிவுக்கு வரும். அதனால், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக, ஒருவரது ஜென்ம ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கும் கிரகம், கோச்சாரத்தில் வக்ரம் ஆகும்போது, அந்த ஜாதகருக்கு, நல்ல பலன்களை தரும் என்பது ஜோதிட விதியாகும்.
ஜென்ம ஜாதகத்தில் வக்கிரம் அடையாத கிரகங்கள், கோச்சாரத்தில் வக்கிரம் அடையும்போது, பெரிய அளவில், நல்ல பலன்களை தருவதில்லை. எனவே, வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் பலன்கள் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறுபடும்.
மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021: இந்த ராசிக்காரர்களுக்கு இனி யோகம்தான்
அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.