ஆலங்குடி கோயிலில் சிறப்பாக நடைபெற்றது குரு பெயர்ச்சி!

ஆலங்குடி கோயிலில் சிறப்பாக நடைபெற்றது குரு பெயர்ச்சி!
குரு பகவான்
  • News18
  • Last Updated: October 4, 2018, 10:52 PM IST
  • Share this:
நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இன்று இரவு 10.05 மணிக்கு இடம்பெயர்ந்தார்.

இதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த ஆலங்குடியிலுள்ள ஆபத்சாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்தக் கோயில் குரு பரிகார தலமாக கருதப்படுகிறது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.


முன்னதாக இரவு 10.05 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் இடம்பெயர்ந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் திட்டை, பட்டமங்கலம், சென்னை பாடி திருவலிதாயம் உள்ளிட்ட கோயில்களிலும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது.
First published: October 4, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்