• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குருப்பெயர்ச்சி 2021: கோவில்களில் சிறப்பு வழிபாடு - சிறப்பு நேரலை.. எப்படி காணுவது?

குருப்பெயர்ச்சி 2021: கோவில்களில் சிறப்பு வழிபாடு - சிறப்பு நேரலை.. எப்படி காணுவது?

குருப்பெயர்ச்சி 2021

குருப்பெயர்ச்சி 2021

குரு பரிகார கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளை கீழ் கண்ட லிங்குகளில் சென்று நேரலையாக காணலாம்..

  • Share this:
    நவக்கிரகங்களில் முழு சுப கிரகம் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார். இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு.

    குருவுக்கு மேலும் பல்வேறு விதமான ஆதிக்கங்கள் உள்ளன. ஞானம், கூர்ந்த மதிநுட்பம், மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை எல்லாம் குருவின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அவரது அருள் இருந்தால் இந்த துறைகளில் பிரகாசிக்கலாம்.

    வாக்கியப்பஞ்சாங்கப்படி இன்று (நவ 13) குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. மகர ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் கும்ப ராசிக்கு மாலை 6 மணிக்கு மேல் இடப்பெயர்ச்சியாகிறார். குருபகவான் கும்ப ராசியில் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்வார். திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் கார்த்திகை மாதம் 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதியன்று சனிக்கிழமையன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.

    குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார்.

    குரு பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெறுகின்றன.  குறிப்பாக குரு பரிகார ஸ்தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தெந்திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவில்,  திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் [குருஸ்தலம்] திருக்கோயில்,  சென்னை பாடியில் அமைந்துள்ள  திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில் போன்ற கோவில்களில் நடக்கும் விஷேச பூஜைகள் யூடியூபில் நேரலை செய்யப்படுகிறது.

    குரு பரிகார கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளை கீழ் கண்ட லிங்குகளில் சென்று நேரலையாக காணலாம்..

    தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்,திட்டை,தஞ்சாவூர்...


    அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில்,ஆலங்குடி,திருவாரூர்.



    திருவலிதாயம் திருவல்லீசுவரர் திருக்கோயில்,பாடி,சென்னை.



    மேலும், இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஜோதிடர் ஷெல்வி நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நேயர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: