ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சிறிய கட்சியாக மாறிவிடும்’ : துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி!

’எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக சிறிய கட்சியாக மாறிவிடும்’ : துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி!

குருமூர்த்தி

குருமூர்த்தி

எடப்பாடி பழனிசாமி மட்டுமே அதிமுகவின் அடையாளமாக இருந்தால் அதிமுகவின் நிலை என்னவாகும் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த ஆடிட்டர் குருமூர்த்தி, ''அதிமுக சிறிய கட்சியாக இருக்கும்'' என்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

’எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவின் அடையாளமாக இருந்தால், அதிமுக சிறிய கட்சியாக மாறிவிடும்’ என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜிவ் மல்கோத்ரா எழுதிய ’ஸ்னேக்ஸ் கங்கா’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆடிட்டரும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ’திமுக தலைவர் பொதுக்குழுவில் பேசியது அவர் மனதில் வேதனை இருப்பதை காட்டுகிறது. அவர் தூக்கமில்லாமல் இருப்பதை காட்டுகிறது ஆனால் அதற்கு இவர்தான் காரணம் என்று சொல்லவில்லை. அவரது நிலை பரிதாபமாக உள்ளது. அவர் வலியுடன் இருப்பதை காட்டுகிறது என்றார்.

மழை பெய்தாலும் ,பெய்யா விட்டாலும் என்னைதான் குறை சொல்வார்கள் - வேதனை தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிமுகவில் தொடரும் உட்கட்சி பிரச்னை குறித்து ஏதேனும் ஆலோசனை தெரிவித்தீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி  பதிலளித்த அவர், ‘அதிமுக 2017 ஆம் ஆண்டில் என்னிடம் ஆலோசனை கேட்டதால்  நான் ஆலோசனை வழங்கினேன். அன்று கேட்டார்கள் இன்று கேட்கவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக என்னிடம் ஆலோசனை கேட்பவர்களிடம் ஆலோசனை தருவேன்.

பாஜக அதிமுகவை பிளவு படுத்தாது. ஆனால் அதிமுக பிளவால் பாஜக வளர்ச்சி பெறும். அதேபோல அதிமுக என்பது திமுகவிற்கு எதிரான கட்சி. திமுகவிற்கு எதிரான உணர்வு அதனுடைய வாக்கு பலம். அதனுடைய சமுதாய வீச்சு.. இவையெல்லாம் பிரியும் போது, அதிமுகவில் இருந்து யார் பிரிந்தாலும் அது சின்ன கட்சியாகிவிடும். எனவே அதிமுக பிளவுபடுவது பலவீனமே என கூறினார்.

Published by:Lakshmanan G
First published:

Tags: Admk Party, Auditor Gurumoorthy