கோவையை சேர்ந்த பெண் குறித்து சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவுகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.
மதுரையை சேர்ந்த சூர்யா (எ) சுப்புலட்சுமி, 'ரவுடி பேபி' என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதேபோல, மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சிக்கந்தர்ஷா என்பவரும் வீடியோ பதிவிட்டு வந்தார். ஆபாசமாக பேசி அவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இவர்கள் இருவர் மீதும் கோவையை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில் தன்னையும், தனது குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு இருப்பதாக கொடுத்த புகாரை விசாரித்த கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த ஜனவரி மாதம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சிக்கந்தர்ஷா மீது மட்டும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
படத் தயாரிப்பு என்ற பெயரில் ரூ.1.25 கோடி மோசடி - திரைப்பட இயக்குநர் மீது கோவை தம்பதி எஸ்.பியிடம் புகார்
இந்நிலையில் இன்று "ரவுடி பேபி" சூர்யா மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்திருந்ததை ஏற்று மாவட்ட ஆட்சியர் சமீரன், ரவுடிபேபி சூர்யா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள ரவுடிபேபி சூர்யாவிடம் இன்று வழங்கப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.