கோயில் நிலம்... கோஷ்டி மோதல்... துப்பாக்கிச்சூடு... திருப்போரூரில் நடந்தது என்ன?

திருப்போரூரில் கோவில் நிலத்தை யார் பயன்படுத்துவது என்ற தகராறில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயில் நிலம்... கோஷ்டி மோதல்... துப்பாக்கிச்சூடு... திருப்போரூரில் நடந்தது என்ன?
திமுக எம்.எல்.ஏ இதயவர்மன்
  • Share this:
சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த செங்காடு கிராமத்தில் குமாருக்கும் அவரது சகோதரருக்கும் 350 ஏக்கர் நிலம் உள்ளது. செங்காடு கிராமத்தின் நடுவில் உள்ள செல்லியம்மன் கோவிலைச் சுற்றி கோவிலுக்குச் சொந்தமான நிலம் உள்ளது

அதன் அருகே, திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதிக்கு சொந்தமான நிலமும் வீடும் உள்ளன லட்சுமிபதியும், குமாரும் தங்கள் நிலங்களுக்குச் செல்ல கோவில் நிலத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதில் இருதரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருவாய்த் துறை அலுவலர் முன்பு பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை அந்தப் பாதையின் ஒரு பகுதியை லட்சுமிபதியின் ஆதரவாளர்கள் எந்திரம் வைத்து தோண்டிப் போட்டுள்ளனர். பொதுப் பாதையைத் தோண்டக் கூடாது எனக் கூறி குமாரின் ஆட்கள் அந்தக் குழியை மூடி விட்டனர். இதுதொடர்பாக இருதரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் குமார் சென்னையில் இருந்து 50 நபர்களை அழைத்துச் சென்று பாதை அமைக்கும் பணியை செய்துள்ளார்.


தகவல் அறிந்த லட்சுமிபதியும் திமுக எம்எல்ஏ இதயவர்மனும் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதாகவும் அப்பொழுது அங்கிருந்த சென்னையை சேர்ந்த ரவுடிகளுக்கும் லட்சுமிபதி தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

லட்சுமிபதி உள்ளிட்ட சிலரை சென்னையை சேர்ந்த ரவுடிகள் அரிவாளால் வெட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த திருப்போரூர் திமுக எம்எல்எ இதயவர்மன், அவரது தந்தை லட்சுமிபதி தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில், குமாரின் இன்னோவா கார் கண்ணாடி மற்றும் முன்பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அப்போது அவ்வழியாக சென்ற சீனிவாசன் என்பவர் உடலில் குண்டு பாய்ந்துள்ளது.

ரத்த வெள்ளத்தில் விழுந்த சீனிவாசன், மீட்கப்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த குமார் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று 3 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணையில் ஈடுபட்டார்அப்போது குமாரின் ஆதரவாளர்கள் அரிவாளால் வெட்டியதால் தற்காப்பிற்காக குருவி சுடும் நாட்டு துப்பாக்கியால் சுட்டதாக லட்சுமிபதி தெரிவித்தார். இதை அடுத்து கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சீனிவாசன் புகாரில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீது கொலை முயற்சி, சட்டவிரோதமாக துப்பாக்கியை பயன்படுத்துததல் உட்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது தந்தை லட்சுமிபதி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் கலவரத்தில் ஈடுபட்டதாக இருதரப்பைச் சேர்ந்த 70 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. கண்ணன், கலவர பகுதியில் இருந்து இரண்டு துப்பாக்கிகள், ஜேசிபி, டிராக்டர், 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிகள் இரண்டும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் காலாவதியாக இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக கூறினார்.

சீனிவாசன் தனக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துவிடுவார் என்பதால் அவரை, எம்எல்ஏ தரப்பினர் கடத்தி வைத்துள்ளதாகவும் எஸ்.பி. தெரிவித்தார். இதை அடுத்து தலைமறைவாக இருந்த திமுக எம்எல்ஏ இதயவர்மன் தப்பி சென்ற கார் சென்னை பள்ளிகாரணை பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பொதுப்பாதை விவகாரத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டால் திருப்போரூர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading