முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நீதிபதி மீது காலணி வீசிய குற்றவாளி - நீதிமன்றத்தில் பரபரப்பு

நீதிபதி மீது காலணி வீசிய குற்றவாளி - நீதிமன்றத்தில் பரபரப்பு

விரக்தியடைந்த குற்றவாளி நீதிபதி பி.எஸ். கலா மீது திடீரென காலணியை கழற்றி வீசினார்.

விரக்தியடைந்த குற்றவாளி நீதிபதி பி.எஸ். கலா மீது திடீரென காலணியை கழற்றி வீசினார்.

விரக்தியடைந்த குற்றவாளி நீதிபதி பி.எஸ். கலா மீது திடீரென காலணியை கழற்றி வீசினார்.

 • 1-MIN READ
 • Last Updated :

  ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது நீதிமன்ற அறைக்குள் குற்றவாளி திடீரென காலணி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கு ஒன்றில் இன்று நீதிபதி தீர்ப்பு கூறினார். சம்பந்தப்பட்ட 27 வயது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த பின்னர் விரக்தியடைந்த அந்த குற்றவாளி நீதிபதி பி.எஸ். கலா மீது திடீரென காலணியை கழற்றி வீசினார். இருப்பினும் அவர் வீசிய நீதிபதி மீது காலணி படாமல் சாட்சிகள் விசாரிக்கும் கூண்டில் சென்று விழுந்தது. இதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்படைந்தது.

  மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த 27 வயது குற்றவாளியின் பெயர் சுஜித் சாகேத், சூரத் நகரில் தங்கி வேலைபார்த்து வரும் சுஜித் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதியன்று, சக புலம்பெயர் தொழிலாளியின் 5 வயது மகள் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு அவருக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி ஒதுக்குப்புறமான பகுதிக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து அச்சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

  Also read:  15 பியூன், ஸ்வீப்பர் பணிகளுக்கு விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான பட்டதாரிகள்

  பின்னர் அச்சிறுமியை கொலை செய்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஹசிரா போலீஸ் நிலையத்தில் சுஜித் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 26 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், 53 தடயங்களை கருத்தில் கொண்டு இன்று நீதிபதி சஜித்துக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

  First published: