மதுரையில் தொடர்ந்து 35 மணி நேரம் 2021 பேர் பங்கேற்று அபாகஸ் கணித முறையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
மதுரை ஆனையூர் பகுதியில் இயங்கி வரும் Brainy Bobs என்ற அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை 6 மணிக்கு துவங்கி தொடர்ந்து 35 மணி நேரம் அபாகஸ் பயிற்சியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
2021 ஆம் ஆண்டு “ஆன்லைன் ஆண்டு” என்பதை உணர்த்தும் வகையில் 2021 நிமிடம் 2021 நபர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், பெரியோர்கள் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களும் இந்த சாதனை நிகழ்வில் பங்கேற்றனர்.
ஏற்கனவே 1000 மாணவர்களை கொண்டு Brain Jim எனப்படும் சாதனையும் அபாகஸ் மூலம் நிகழ்த்தப்பட்டு உள்ளதாகவும், அடுத்ததாக ஒரே நேரத்தில் பாட்டு பாடிக் கொண்டே கணக்கு போடும் விதமான சாதனையை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாக பயிற்சி மைய நிறுவனர் பிரியா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆபாகஸ் பயிற்சியின் மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனும், கவனிக்கும் திறனும் மாணவர்களுக்கு அதிகரிக்கும் என்பதால், விரைவில் அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அவர்களை வைத்தும் அபாகஸ் சாதனை நிகழ்த்த உள்ளதாகவும் பிரியா குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.