9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் வருகின்ற 8ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதில், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை முழுமையாக பள்ளிகள் இயங்கலாம் என்றும், மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளில், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை பள்ளிகள் இயங்கலாம் என்றும், உரிய இடைவெளியுடன் பள்ளி வளாகங்களில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, ஆசிரியர்கள் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.