அரசு 3 மாதங்களாக ஊதியம் தரவில்லை: வாழ்வாதாரத்தை இழந்ததாக கவுரவ விரிவுரையாளர்கள் வேதனை..

அரசு 3 மாதங்களாக ஊதியம் தரவில்லை என்பதால் வாழ்வாதாரத்தை இழந்ததாக கவுரவ விரிவுரையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரசு 3 மாதங்களாக ஊதியம் தரவில்லை: வாழ்வாதாரத்தை இழந்ததாக கவுரவ விரிவுரையாளர்கள் வேதனை..
கோப்பு படம்
  • Share this:
அரசு 3 மாதங்களாக ஊதியம் தரவில்லை என்பதால் வாழ்வாதாரத்தை இழந்ததாக கவுரவ விரிவுரையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கொரோனா தாக்கம் பலரையும் நிலைய குலையச்செய்தது போல் கடந்த 3மாதங்களாக ஊதியம் இல்லாமல் சிரமப்பட்டுஅரசு 3 மாதங்களாக ஊதியம் தரவில்லை என்பதால் வாழ்வாதாரத்தை இழந்ததாக கவுரவ விரிவுரையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். வருகின்றனர் அரசு  கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள்.

தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை நேர வகுப்புகளில் 2423 கவுரவவிரிவுரையாளர்களும்  மாலை நேர வகுப்புகளில் 1661 கவுரவ விரிவுரையாளர்கள் என 4084 பேர் சூழற்சி முறையில்  பணிபுரிந்து வருகின்றனர்.


இவர்களுக்கு மாதம்  15000 ரூபாய் தொகுப்பூதியம்  வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக கல்லூரிகள் மூடப் பட்டிருக்கின்றது. இதன் காரணமாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் கவுரவ விரிவுரையாளர்கள்.

Also read... கொத்தவால்சாவடி காய்கறி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்...

இது குறித்து நம்மிடம் பேசிய அரசு கவுரவ விரிவுரையாளர் சங்க நிர்வாகி தங்கராஜ், கொரோனோ காலத்தில் தங்களுக்கான ஊதியம் வழங்க அரசிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள்  கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவிக்கிறார்.தாங்கள்படும்  சிரமங்களை உணர்ந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading