Home /News /tamil-nadu /

கோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி

கோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை - விபத்து போல சித்தரிக்க முயற்சி

கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை.

கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை.

கோவில்பட்டி அருகே கொய்யாப் பழ வியாபாரி லோடு ஆட்டோ ஏற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையை மறைக்க விபத்து போல சித்தரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு- தேவர்குளம் ரோட்டில் அய்யனார்வூத்து கிராமம் அருகே லோடு ஆட்டோ - பைக் மோதி ஒருவர் இறந்துக் கிடப்பதாக கயத்தார் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையெடுத்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு லோடு ஆட்டோ பைக் மீது மோதி ஒருவர் இறந்துக் கிடப்பதைப் பார்த்துள்ளனர்.

இதன் பின்னர் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் விளாத்திகுளம் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த சண்முகையா மகன் முத்துப்பாண்டி (32) என்றும் அவர் கொய்யாப்பழ வியாபாரி எனவும் தெரிய வந்தது.

போலீசார் லோடு ஆட்டோவைப் பார்வையிட்டபோது ஆட்டோவின் நம்பர் மற்றும் சைடு பகுதியில் எழுதப்பட்டவைகள் அனைத்தும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டிருந்தன. இதனால் விபத்து பற்றி சந்தேகம் ஏற்பட்டது. அதன் பின்னர் தீவிர விசாரணை நடத்தியதில் விபத்து ஏற்படுத்தியது போல் நம்ப வைத்து, ஆட்டோவால் முத்துபாண்டி பைக் மீது மோதவிட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

லோடு ஆட்டோ மோதிய இருசக்கர வாகனம்.


Also see:

மேலும், தொழில் போட்டியில் ஏற்பட்ட முன்பகையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடத்தியதில் கொய்யாப்பழ வியாபாரியான கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த பசுபதி பாண்டியன் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முத்துப்பாண்டிக்கும், பசுபதி பாண்டியனுக்கும் கோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் கொய்யாப் பழம் விற்பது சம்பந்தமாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு விசாரணை நடந்துள்ளது. அதனால் இருவருக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. கோவில்பட்டி டி.எஸ்.பி. கலை கதிரவன் நேரில் விசாரணை நடத்தினார். கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனர்.
Published by:Rizwan
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Murder

அடுத்த செய்தி