முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளர்’ பட்டம்...!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘காவிரி காப்பாளர்’ பட்டம்...!
வயலில் நாற்று நடும் முதலமைச்சர்
  • News18
  • Last Updated: March 8, 2020, 6:57 AM IST
  • Share this:
ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதற்கு பரிசீலனை செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற பிரமாண்ட பாராட்டு விழாவில், முதலமைச்சருக்கு காவிரி காப்பாளர் என்ற பட்டம் சூட்டப்பட்டது.

காவிரி டெல்டா பாசன பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி அறிவிப்பு மற்றும் பாராட்டு விழா திருவாரூரில் நடைபெற்றது. விழாவுக்கு வழக்கமாக காரில் வரும் முதலமைச்சர், இம்முறை விவசாயிகளைப் போலவே, மாட்டுவண்டியை ஓட்டிக் கொண்டு உற்சாகமாக விழா மேடைக்கு வந்தடைந்தார்.

தொடர்ந்து டெல்டா விவசாயிகள் சார்பில் அவருக்கு, ஏர் கலப்பை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. விவசாயிகள் சார்பில் காவிரி காப்பாளர் என்ற பட்டத்தை, மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் அறிவித்தார்


விழாவில் பேசிய முதலமைச்சர், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டமுன்வடிவை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்ததை நினைத்து தான் மிகவும் பெருமைக் கொள்வதாக கூறினார். தமிழகத்தில் நூற்றுக்கு 65 சதவீதம் பேர் விவசாயிகளாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை, திரும்பப் பெறுவதற்கு பரிசீலனை செய்யப்படும் எனவும், விரைவில் நல்ல செய்தி வரும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தை தமிழக அரசால் இயற்ற முடியுமா என்று சிலர் சந்தேகம் கிளப்பிக் கொண்டிருப்பதாக விமர்சித்த முதலமைச்சர், இதுகுறித்து தமிழக அரசுக்கு அனைத்து உரிமையும் இருப்பதாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரே தெளிவாக கூறியிருப்பதாக குறிப்பிட்டார்.கோதாவரி காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், டெல்டாவில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்ற அவர், கண்ணை இமை காப்பது போல விவசாயிகளைக் காப்போம் என்று உறுதி பூண்டார்.

மேலும் மறைந்த நெல் ஜெயராமனின் பெயரில், நீடாமங்கலத்தில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் எனவும், புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிந்துகொள்ள, அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல நிதி ஒதுக்கப்படும் எனவும் கூறினார்.
Also Read: கொரோனா பரவலை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: March 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading