திருப்பூரில் போலி ஆவணங்கள் மூலம் ₹ 50 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு - தொழிலதிபர் உள்பட 2 பேர் கைது

திருப்பூரில் போலி ஆவணங்கள் மூலம் சுமார் 50 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் உட்பட இருவரை ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூரில் போலி ஆவணங்கள் மூலம் ₹ 50 கோடி ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு - தொழிலதிபர் உள்பட 2 பேர் கைது
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: August 14, 2020, 3:23 PM IST
  • Share this:
திருப்பூரை சேர்ந்த முகமது சாஹில் கடந்த சில தினங்களுக்கு முன் தனது நிறுவனத்திற்கு வரி சலுகை பெற மும்பையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தை அணுகியுள்ளார்.

50 கோடி ரூபாய் பணபரிவர்த்தனை செய்ததற்கான ஆவணங்களை சமர்பித்த அவர், இரண்டு கோடியே 5 லட்சம் ரூபாய் வரிச் சலுகை கோரியுள்ளார். சாஹிலின் ஆவணங்களில் சந்தேகமடைந்த அதிகாரிகள் கோவை மண்டல ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் அனுப்பினர்.

Also read... மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை.. சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு...


இது தொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், ஜவுளி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜிஎஸ்டி ஆலோசகர் கந்தசாமி மூலம் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 15 நாட்கள் சிறையில் அடைத்தனர்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading