Home /News /tamil-nadu /

வாகன உற்பத்திக்கான ஜி.எஸ்.டி குறையுமா? நிர்மலா சீதாராமன் பதில்

வாகன உற்பத்திக்கான ஜி.எஸ்.டி குறையுமா? நிர்மலா சீதாராமன் பதில்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

  • Last Updated :
    வாகன விற்பனை வீழ்ச்சிக்கு ஜி.எஸ்.டி காரணமாக இருந்தால், அதனைக் குறைக்க ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் வாகன உற்பத்திக்கான ஜி.எஸ்.டி குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஜி.எஸ்.டி. குழுவே முடிவெடுக்கும் அதற்கான பரிந்துரைகள் நிதித்துறை சார்பில் அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும்‌ என்றார்.

    “வங்கிகள் இணைப்புகள் மூலம் 1 சதவீதம் கூட வேலை இழப்புகள் இருக்காது, எந்த வங்கிகளும் மூடப்படாது, வங்கிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்.

    பொதுவாக தேசியமாக்கப்பட்ட வங்கிகளுக்கு நிதிகள் அதிகமாக தரப்படுகிறது, எந்த வங்கிகளும் மூடப்படாது. பொருளாதார பின்னடைவால் வாகன உற்பத்தி சரிவடைந்ததால் 3 .5 லட்சம் பேர் வேலை இழந்திருப்பதாக கூறப்பட்டதற்கு எந்த வித புள்ளி விவரமும் இல்லை.

    பெரிய நிறுவனங்களில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்ற புள்ளிவிவரம் உள்ளது. ஆனால், சிறுகுறு நிறுவனங்களில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்பதற்கான ஆவணங்கள் இல்லை.

    31 மார்ச் 2020-ம் ஆண்டு முதல் பி.எஸ்.4 எஞ்சின் கொண்ட வாகனங்கள் பயன்படுத்த வேண்டும் என உத்தவிரட்டது. உச்சநீதிமன்றம்தான். இதற்கும் அரசுக்கும் சம்மந்தம் இல்லை.

    வாகன உற்பத்தி வீழ்ச்சிக்கு ஜி.எஸ்.டி காரணம் என்றால் இது குறித்து ஜி.எஸ்.டி. குழுவிற்கு பரிந்துரைப்போம். இது குறித்து ஆட்டோ மொபைல் நிறுவனங்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம்.

    தங்கத்தின் மீது இந்தியாவில் அதிக ஈர்ப்பு உள்ளது உலக நாடுகளின் முதலீடுகளைப் பொறுத்தே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது” என்றார்.

    பொருளாதார வீழ்ச்சி குறித்த கேள்விக்கு இது குறித்து கவனித்து, அனைத்து துறைகளுடனும் கலந்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

    Published by:Sankar
    First published:

    Tags: Nirmala Sitharaman

    அடுத்த செய்தி