பாக்கெட் சாராயம் விற்ற கும்பலை அடித்து நொறுக்கிய பெண்கள்: நாகையில் பரபரப்பு

நாகை மாவட்டத்தில், காரைக்காலில் இருந்து பாக்கெட் சாராயம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்வதை அறிந்த கிராம மக்கள், சாராய பாக்கெட்டுகளை உடைத்து, சாராய விற்பனைக் கும்பலையும் அடித்து விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • Last Updated: September 8, 2020, 12:28 PM IST
  • Share this:
நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் மாவட்ட எல்லைகளில், காரைக்காலில் இருந்து கடத்தி வரப்படும் பாக்கெட் சாராய விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. குறிப்பாக கீழ்வேளூர் அருகே ஆனைமங்கலம் ஊராட்சியில், இந்த சாராய விற்பனை தடையின்றி நடந்து வருவதாக புகார்கள் உள்ளன.

இந்த நிலையில், திங்கட்கிழமை அந்தப் பகுதியில் இளைஞர்கள் சிலர் கடத்தல் சாராயம் விற்பதாக  கிராமத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து பெண்கள் விறகு கம்புகளுடன் சாராய விற்பனை நடந்த இடத்திற்கு சென்று சாராயம் விற்ற நபர்களை சரமாரியாக அடித்துத் தாக்கி, சாராய பாக்கெட்டுகளை உடைத்தனர்.

தகவலறிந்து கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக், கண்ணன், நாவலன், தன்ராஜ் ஆகிய நான்கு பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் 110 லிட்டர் வெளிமாநில சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


படிக்க...சுஷாந்த் சகோதரி மீது நடிகை ரியா புகார்

நாகை மாவட்டத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே 11 எல்லைச் சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த சாவடிகளையும், மேலவாஞ்சூர், திருப்பட்டினம், திட்டச்சேரி, விழுதியூர் உள்ளிட்ட வேறு 6 வழிகள் மூலமாகவும் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தப்படுகிறது.

இருசக்கர வாகனங்களை உயிரைப் பணயம் வைத்து ஓட்டி வரும் இளைஞர்களுக்கு 2000 ரூபாயும், பின்னால் அமர்ந்தபடி சாராய மூட்டைகளைப் பிடித்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு 800 ரூபாயும் சாராய விற்பனைக் கும்பலால் வழங்கப்படுகிறது.படிக்க... இந்தி திணிப்பு - மத்திய அரசு அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு

கொரோனாவால் வேலை இழந்தவர்கள், படித்து விட்டு வேலையில்லாமல் திரியும் இளைஞர்கள் பணத்திற்காக இந்த கடத்தலில் ஈடுபடுகின்றனர். நாகூர் முதல் நாகை வரை வைக்கப்பட்டுள்ள 83 சிசிடிவிக்களை ஆய்வு செய்தாலே இந்தக் கடத்தலைத் தடுக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

அதேபோல், பிரதான சாலை வழிகள் தவிர கிராமங்கள் வழியாக செல்லும் சாலைகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டால் சாராயக் கடத்தலை முற்றிலுமாக தடுக்க முடியும் என்கின்றனர்.

 

நாகை மாவட்ட போலீசார் சாராயக் கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பார்களா?
First published: September 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading