பள்ளி மாணவியை கிண்டல் செய்ததால் மாணவர்களிடையே மோதல் - பொதுத்தேர்வு எழுத வந்த இடத்தில் ரகளை
பள்ளி மாணவியை கிண்டல் செய்ததால் மாணவர்களிடையே மோதல் - பொதுத்தேர்வு எழுத வந்த இடத்தில் ரகளை
பள்ளி மாணவர்கள் மோதல்
Thiruvallur | பள்ளி மாணவியை கிண்டல் செய்தவர்களுடன் இருந்ததால் உள்ளூர் இளைஞர்கள் பள்ளி மாணவனை தாக்கிய சம்பவம் மாணவர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி வளாகத்தில் ஒரு மாணவனை சக மானவர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலான நிலையில் பாதிக்கபட்ட மாணவனின் தாயார் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவள்ளுர் மாவட்டம்ஆவடி காமராஜர் நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் சோராஞ்சேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சிபி அரசன் என்ற மாணவன் நேற்று 10 ஆம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுத வந்துள்ளார். இங்கு கோணம்பேடு பகுதியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பொதுத் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளனர். அப்பொழுது கோனாம்பேடு பள்ளியை சேர்ந்த மாணவிகளை காமராஜர் நகர் அரசினர் பள்ளி மாணவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அம்மாணவிகள் சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வு முடித்துவிட்டு பள்ளி வாசலில் நின்று கொண்டிருந்த மாணவனை அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவனின் உதவியுடன் உள்ளூரைச் சேர்ந்த 20 பேர் கொண்ட மாணவர்களை வைத்து மாணவனை பள்ளி வளாகத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். நடந்த சண்டையை தடுக்க வந்த சிலரையும் அந்தகும்பல் கடுமையாக தாக்கி அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வந்தது மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்ததார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக மாணவனை ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் எக்ஸ்ரே எடுக்க அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி மாணவியை கிண்டல் செய்தவர்களுடன் இருந்ததால் உள்ளூர் இளைஞர்கள் பள்ளி மாணவனை தாக்கிய சம்பவம் மாணவர்களிடையே அச்சத்தையும் பெற்றோரிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-செய்தியாளர்: கன்னியப்பன்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.