குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி அறிக்கை - 4 வி.ஏ.ஓ.க்கள் உட்பட 20 பேர் பணியிடை நீக்கம்

கோப்பு படம்

2019 குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக நான்கு வி.ஏ.ஓ.க்கள் உள்பட 20 பேர் மீது, கடந்த ஒரு மாதத்தில் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

 • Share this:
  டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு, குரூப் 2ஏ தேர்வு மற்றும் வி.ஏ.ஓ.தேர்வில் முறைகேடு செய்ததாக, 50க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணையில், மேலும் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கொரோனா காலம் என்பதால் அவர்களை சிறைக்கு அனுப்பாமல் உள்ளனர். எனினும் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி சிபிசிஐடி தரப்பில் அறிக்கை அனுப்பப்பட்டதை தொடர்ந்து, 20 பேரும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு கிடப்பில் இருப்பதாக அனைத்து தரப்பில் இருந்தும் புகார் எழுந்தது.

  மேலும் படிக்க...உலக பிரியாணி தினத்தையொட்டி அதிரடி சலுகை - திருச்சியில் 10 பைசாவுக்கு பிரியாணி விற்பனை  இந்நிலையில், கடந்த 15 நாள்களாக சிபிசிஐடி அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விசாரணையில் வழக்கில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் உள்ளபட மேலும் 6 பேரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வழக்கு கிடப்பில் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், 15 நாள்களில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: