பெரியார், திராவிட இயக்கம், தமிழ் இலக்கியம் - தமிழகம் சார்ந்த கேள்விகளுக்கு குரூப் 1 தேர்வில் முக்கியத்துவம்

கோப்பு படம்

பெரியாரைப் பற்றிய 8 கேள்விகள், தமிழக சீர்திருத்த இயக்கங்கள், தமிழ் இலக்கியம் உள்ளிட்டவைகளிலிருந்து இன்று நடந்த குரூப்1 தேர்வில் பிராதனமாக கேள்விகள் இடம்பிடித்தன.

 • Share this:
  உதவி ஆட்சியர், காவல் துணை கண்கானிப்பாளர் உள்ளிட்ட குரூப்-1 பணியிடங்களில் காலியாகவுள்ள 66 பணியிடங்களுக்கு இன்று தேர்வுகள் நடைபெற்றன. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன.அன்மை காலமாக பெரியார் சிலை அவமதிக்கப்படுவது, பெரியாரை முன்வைத்து ஏற்பட்டு வருகின்ற கருத்து மோதல்கள் உள்ளிட்டவை அதிகரித்து வருகின்ற நிலையில் அவரை பற்றிய கேள்விகளுக்கு குரூப் 1 தேர்வில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

  அந்த வகையில் பெரியாரை சார்ந்து அவர் தொடர்புடைய 8 கேள்விகள் இடம் பிடித்தன. அண்ணா, திராவிட இயக்கம் தொடர்புடைய கேள்விகளும் மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் பற்றியும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த கேள்வியும் இடம்பிடித்துள்ளது.

  முந்தைய தேர்வு வினாத்தாளை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வுக்கான வினாத்தாளில் தமிழக அரசியல், இலக்கியம், தமிழக வரலாறு சார்ந்த கேள்விகள் அதிகம் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக இந்த ஆண்டு மாற்றப்பட்ட புதிய பாடத்திட்ட அடிப்படையில் கேள்விகள் இடம்பெற்றன. ஏற்கனவே தமிழகம் சார்ந்த கேள்விகள் இனிவரக்கூடிய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் அதிகம் இடம்பெறும் என்று அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: