முதலிரவு அறையில் இருந்து அலறியடித்த வந்த பெண்.. தூக்கில் தொங்கிய நிலையில் மணமகன் – செங்கல்பட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

முதலிரவு அறையில் மணமகன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    சென்னையில் முதலிரவு அறையில் மணமகன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் பெலாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கும் இவரது அத்தை மகளான நந்தினி என்ற பெண்ணுக்கு கடந்த 8-ம் தேதி திருமுல்லைவாயலில் திருமணம் நடந்தது. மணமக்கள் திருமுல்லைவாயிலில் உள்ள பெண் வீட்டில் தங்கியிருந்தனர். மணமகன் குடும்பத்தினர் பெலாங்குப்பம் கிராமத்திற்கு சென்று விட்ட நிலையில் அவரது சகோதரி சரஸ்வதி என்பவர் மணமகள் இல்லத்தில் இருந்துள்ளார். முதலிரவுக்காக மணமக்களை இரவு 9.30 மணிக்கு அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டு உறவினர்கள் பக்கத்து அறையில் உறங்கியுள்ளனர்.

    Also Read:  கல்யாணத்துக்கு பிறகு 25 ஆண்களுடன் ஓட்டம் பிடித்த பெண் – ஒவ்வொரு முறையும் ஏற்றுக்கொள்ளும் காதல் கணவன்

    செப்டம்பர் 9-ம் தேதி  காலை 6 மணியளவில் மணப்பெண் கூச்சலிட்டவாறு வெளியில் ஓடிவந்துள்ளார். மாப்பிள்ளை கார்த்திகேயன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். கார்த்திகேயன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை மீட்ட உறவினர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் இரவில் உங்கள் இருவருக்கும் இடையே எதாவது தகராறு ஏற்பட்டதா  என மணமகனின் சகோதரி நந்தினியிடம் கேட்டுள்ளார். எங்களுக்குள் எந்தப்பிரச்னையும் நடக்கவில்லை. அவர் உள்ளே வந்ததில் இருந்தே பதற்றமாக இருந்தார். நான் அவரை சமாதானம் செய்து விட்டு தூங்கிவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து பெலாங்குப்பம் கிராமத்தில் இருந்த உறவினர்களுக்கு கார்த்திகேயன் மரணம் குறித்து தகவல் தெரிவித்தனர். மணமகன் மரணத்தால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.

    Also Read: வேலை போனால் சாவதைத் தவிர வேறு வழியில்லை - தற்கொலை செய்துக்கொண்ட நதியாவின் ஆடியோ பதிவு

    இந்த சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் காவல்நிலையத்தில் கார்த்திகேயன் சகோதரி புகார் அளித்தார். அவரது புகாரைப் பெற்றுக்கொண்டு போலீஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Ramprasath H
    First published: