தமிழகத்தில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை ரேஷன் கடைகளில்  வழங்க உணவுத்துறை பரிசீலனை?

ரேஷன் கடை.| மாதிரிப்படம்.

சமையலுக்குப் பயன்படும் மளிகைச் சாமான்கள் அடங்கிய தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக தமிழகக் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை பரிசீலித்து வருகிறது.

 • Share this:
  தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.4000 வழங்க முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கையெழுத்திட்டார், அதன்படி ரூ.2,000 நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து சமையலுக்குப் பயன்படும் மளிகைச் சாமான்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவது தொடர்பாக தமிழகக் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை பரிசீலித்து வருகிறது.

  நிவாரணத்தொகை ரூ.2000 வரும் 15ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது. கொரோனா பரவல் பெரிய அளவில் இருந்து வருவதாலும், ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், நடைபாதை வணிகர்கள், வீட்டு வேலை செய்வோர் என நிறைய ஏழைகள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

  இதனையடுத்து இவர்களுக்கு ரேஷன் மூலம் மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

  அரிசி கார்டுதாரர்களுக்கு, சமையலுக்கு தினமும் பயன்படுத்தக் கூடிய, 10,- 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவது தொடர்பாக, கூட்டுறவு மற்றும் உணவு துறை பரிசீலித்து வருகிறது.என்னென்ன பொருட்களை, எத்தனை மாதம் வழங்குவது, அதற்கான நிதி ஆதாரம் போன்றவை இறுதி செய்ததும், இதற்கான அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

  கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலானதில் இருந்து, ரேஷன் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில், முடங்கிய தொழில்கள் இயல்பு நிலைக்கு திரும்ப துவங்கின.இந்த சூழலில், கொரோனா பரவலின் இரண்டாம் அலையால், தினக்கூலி பெறும் தொழிலாளர்களின் நிலை மோசமாகி உள்ளது.

  இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு மளிகைச் சாமான்கள் அடங்கிய தொகுப்பை வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
  Published by:Muthukumar
  First published: