இன்று முதல் தெருக்களில் தள்ளுவண்டிகள், வாகனங்களில் மளிகைப் பொருட்கள் விற்பனை.....

மளிகை பொருட்கள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் வாகனங்கள், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக மளிகைப் பொருட்களை இன்று முதல் விற்பனை செய்யலாம் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை, தமிழகம் முழுவதும் நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கே சென்று வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் அனுமதிக்கப்பட்ட வார்டுகள் அல்லது பகுதிகளில் மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மொபைல் ஆப் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று மொத்த விற்பனை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நடமாடும் கடைகள், மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து மளிகை பொருட்களை வாங்கி, விற்பனை செய்ய உள்ளனர்.

  மேலும் படிக்க... Today Headlines News in Tamil: இன்றைய காலை தலைப்புச் செய்திகள் (மே 31)

  இதற்கிடையே, இறைச்சி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வழக்கமாக தாங்கள் விற்பனை செய்யக்கூடிய வாடிக்கையாளர்கள் மற்றும் உணவகங்களுக்கு இறைச்சியை வழங்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: