கரும்பூஞ்சை பாதிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் பச்சை பூஞ்சை பாதிப்பு- மருத்துவர்கள் சொல்வது என்ன?

பச்சை பூஞ்சை

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்படுவதை போல தற்போது பச்சை பூஞ்சை பாதிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. 

  • Share this:
இந்தியாவில் முதல் முறையாக இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலத்தில் 34 வயது நபருக்கு பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின் பஞ்சாபில் இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் மருத்துவர் ஒருவருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருக்கு கரும்பூஞ்சை பாதிப்பும் சேர்த்து கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் 32 வயது நபருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட ஒரு நல்ல முன்னேற்றம் அடைந்து இருந்திருக்கார்.
கரும்பூஞ்சை பாதிப்பு போலவே இதுவும் முகத்தில் உள்ள செல்களில் பாதிப்பு ஏற்படுத்துவதாக தொற்று நோய் மருத்துவர் வித்யா தேவராஜ் தெரிவிக்கிறார்.

பூஞ்சையின் நிறம் பச்சையாக இருப்பதால் பச்சை பூஞ்சை பாதிப்பு என கூறப்படுகிறது. தீவிர கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதாலும், சிகிச்சையின் போது ஸ்டீராய்டுகள் பயன்படுத்துவதாலும் பூஞ்சை பாதிப்புகள் ஏற்படுகின்றன என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கரும்பூஞ்சை பாதிப்பு போல் அல்லாமல் பச்சை பூஞ்சை பாதிப்பை எளிய ரத்த பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் எனவும் கூறுகிறார். கருப்பு, பச்சை மட்டுமல்லாமல் candida எனப்படும் வெள்ளை பூஞ்சை பாதிப்பும் ஏற்படக்கூடும் என்கிறார் அவர்.
இரண்டு பூஞ்சை பாதிப்புகள் கண்கள் மற்றும் மூளையை பாதிக்கக் கூடியதாகும். இவற்றுக்கான மருந்துகள் வெவ்வேறு என்றாலும் உரிய நேரத்தில் மருத்துவ உதவி பெற்றால் உயிரை காப்பாற்ற முடியும் என காது மூக்கு தொண்டை மருத்துவர் நாகேஸ்வரன் தெரிவிக்கிறார்.
Published by:Karthick S
First published: