• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வடகிழக்கு பருவமழை நடவடிக்கை - நாளை சிறப்பு மருத்துவ முகாம்!

வடகிழக்கு பருவமழை நடவடிக்கை - நாளை சிறப்பு மருத்துவ முகாம்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

மழைகாலம் தொடங்கியுள்ளதால் டெங்கு போன்ற நோய்கள் பரவக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியது. இதை தொடர்ந்து தற்போது சென்னையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

  • Share this:
    வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கிறார்.

    வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை பெய்த கனமழையால் சாலைகள், வீடுகளில் மழைநீர் தேங்கியுள்ளன. ஒருசில பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் நோய் தோற்று பரவும் அபாயம் உள்ளது.

    இதேபோல், கொசு தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மலேரியா, டெங்கு போன்ற  நோய்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. இதையடுத்து மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு வலியுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக பொதுமக்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க சென்னையில் நாளை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் நாளை காலை தொடங்கி வைக்கிறார்.

    இதையும் படிங்க: சென்னையில் இயல்பைவிட கூடுதலாக 77% மழை பதிவாகியுள்ளது - வானிலை ஆய்வு மையம்


    பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல இடங்களில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவல் இருந்து வரும் நிலையில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட 200 வார்டுகளிலும் நாளை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    மேலும் படிங்க: வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி... மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: