• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உதவிக்கு வாங்க...தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு!

உதவிக்கு வாங்க...தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவி செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

  • Share this:
    சென்னையில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவி செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காலை 11 மணி அளவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை பகுதியை நெருங்க உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே கடலூரை ஒட்டி கரையைக் கடக்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் ராணிப்பேட்டையிலும், இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகன மழைக்கும் வாய்ப்புள்ளது

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒருசில இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. வீடுகளிலும் மழை நீர் சூழந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கடந்த ஞாயிறு முதல் மூன்று உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவி செய்ய விரும்பும் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

    இதையும் படிங்க: காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பகுதியில் மாற்றம்.. எங்கு கரையை கடக்கிறது?


    உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் சென்னை மாநகராட்சியின் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc_UadpsLCGEkB5sBPdy6zUV55JrxKn5o5CnjDoNBKHkd7-Pw/viewform என்ற இணயதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: