தாய் மொழி தமிழில் அர்ச்சனை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி - கபாலீஸ்வரர் கோயில் அர்ச்சகர்

கபாலீஸ்வரர் கோயில் அர்ச்சகர் வெங்கட சுப்ரமணிய சிவாச்சாரியார்

'அன்னை தமிழில் அர்ச்சனை' என்று தொடங்கப்படும் இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை தொடங்கப்படும்

  • Share this:
தாய் மொழி தமிழில் அர்ச்சனை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளதாக என்று கபாலீஸ்வரர் கோயிலில் வெங்கட சுப்ரமணிய சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள கோவில்களில் விரைவில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அமைச்சர் சேகர் பாபு கடந்த வாரம் அறிவித்திருந்தார்.'அன்னை தமிழில் அர்ச்சனை' என்று தொடங்கப்படும் இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நாளை (ஆகஸ்ட் 06) அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்படவுள்ளது.

இதன் மூலம் தமிழில் அரச்ச்னை வேண்டும் என நினைக்கும் பக்த்தர்கள் கோவிலில் உள்ள அர்ச்சகரிடம் கூறி தமிழிலில் அர்ச்சனை செய்துகொள்ள முடியும். குறிப்பாக தமிழில் மந்திரம் ஓதும் அர்ச்சகர் பெயர் மற்றும் அவரின் துலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் கோவிலில் நுழைவாயில்களில் பெரிய பலகையில் இடம்பெற்று இருக்கும்.

இதன் மூலம் நீண்ட நாட்களாக தமிழில் அர்ச்சனை வேண்டும் என் வேண்டுகோள் விடுத்த தமிழ் பக்தர்கள் தற்போது அரசின் இந்த உத்தரவால் மனநிறைவுடன் சாமி தரிசனம் செய்வார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: