முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குக - உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குக - உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை உயர்நீதிமன்ற கிளை

மதுரை உயர்நீதிமன்ற கிளை

சிபிஐ-க்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி 300 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சஞ்சீவ் குமார் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனு தாரர் மற்றும் காவல்துறை வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், 300 கோடி ரூபாய் நிதி மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரே விசாரிக்கலாம் என உத்தரவிட்டனர்.

அதே சமயம், நீதிமன்றங்கள் மாநில அரசின் இசைவு பெறாமலேயே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும், அந்தளவுக்கு சிபிஐ நம்பிக்கையான விசாரணை அமைப்பாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும், சிபிஐக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் எனவும், சிபிஐ இயக்குனருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்

சிபிஐ-யின் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் தடயவியல் ஆய்வு கூடத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த உத்தரவுகளை 6 வாரத்தில் சிபிஐ நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் அமர்வு, இல்லையேல் சிபிஐ இயக்குநர் நேரில் ஆஜராக நேரிடும் என உத்தரவிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: High court, Madurai High Court