கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் தனது பாட்டியை ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரத்தை அடுத்துள்ள தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் கார்த்தி. இவர் சரியாக பணிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே வசித்து வருகிறார். இந்தநிலையில், கார்த்தி வீட்டு செலவிற்கு பணம் கேட்டு பாட்டி மீனாவிற்கு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மூதாட்டி வட்டிக்கு பணம் வாங்கி கார்த்திக்கிற்கு கொடுத்துள்ளார். இந்த நிலையில் தொடர்ந்து சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்த கார்த்தி பாட்டி வாங்கி கொடுத்த கடனுக்கும் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இப்படி இருக்க மூதாட்டி, வீட்டிற்கு சாப்பிட வந்த கார்த்தியிடம் வட்டிக்கு வாங்கி கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். இதில் பாட்டிக்கும், பேரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் வலிதாங்க முடியாமல் அலரிய மூதாட்டி மீனாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.
Must Read : தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்ற 16 வயது மாணவி ரயில் மோதி உயிரிழப்பு!
தொடர்ந்து கழுத்தில் காயமடைந்த நிலையில், இருந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் காவல் நிலைய போலீசார் பாட்டியின் கழுத்தை அறுத்த பேரன் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் - ஜெரால்ட், கோவை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.