Home /News /tamil-nadu /

Praggnanandhaa: போட்டியின் வெற்றி தோல்வியை சிந்திக்க வேண்டாம் - கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

Praggnanandhaa: போட்டியின் வெற்றி தோல்வியை சிந்திக்க வேண்டாம் - கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

Grand Master Praggnanandhaa : போட்டியின் வெற்றி தோல்வியை சிந்திக்க வேண்டாம். மகிழ்ச்சியாக உங்கள் விளையாட்டை விளையாடுங்கள் என 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா கூறினார்.

  சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமெழி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நக்கீரன் கோபால், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் பிரக்ஞானந்தா குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியில், ராதாகிருஷ்ணன் பேசுகையில், பிரக்ஞானந்தா இளம் வயதிலேயே 7 ஆம் வகுப்பு பயிலும்போதே கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். அது மிகப்பெரிய விஷயம் என்றார். மேலும் 22-2-22 ல் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் கார்ல்செனை வீழ்த்தி, புதிய வரலாறையும் படைத்தார். மிக விரைவில் உலக சாம்பியன் ஆவா ர் என நம்பிக்கை தெரிவித்தார். அதோடு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

  பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் பேசுகையில், 37 நாடுகளுக்கு சென்றுள்ள இவர் இன்றும் எளிமையாக உள்ளார், நம் தெருவில் இருப்பவரை பாராட்ட வந்ததை போல் தான் உணர்கிறேன்.  11  வருடம் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள இவர் தற்போது வரை கர்வம் இல்லாமல் இருக்கிறார், நமக்கு எதிரியே இந்த வாட்சப்பும், முகநூல் தான் என்றார். இந்தமுறை சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார் என்றார்.

  அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், என்னை பொறுத்தவரை என்னுடைய மாணவர்களும் மாணவிகளும் தான் ராஜா ராணி ஏனெனில் எதிர்காலத்தில் அவர்கள் தான் நாட்டை ஆளப்போகிற ராஜா ராணிகள் அவர்களுக்கு சிப்பாய்களாக இருந்து அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.

  இந்நிலையில், பிரக்ஞானந்தாவின் தாய் நாகலட்சுமி கூறுகையில், “அவனது அக்கா வைஷாலி டிவி சேனல் பார்கிறார் என்று தான் எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் செஸ் பயிற்சி பள்ளியில் பிரக்ஞானந்தாவை சேர்த்து விட்டிருந்தோம். அதனை தொடர்ந்து தான் அவன் ஆர்வம் வளத்துக்கொண்டான். மேலும் அவன் எங்களை பெருமையடைய செய்த தருணம், அவன் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை இந்த சின்ன வயதிலேயே வாங்கியது தான் என்று பெருமிதத்துடன் கூறினார். தந்தை ரமேஷ் மேடையில் பேசுகையில், இந்த மேடையில் எங்களை அமர வைத்திருப்பதே எங்களுக்கு பெருமை என்றார்.  Must Read : தொடங்கியது அக்னி நட்சத்திரம்... சுட்டெரிக்கும் வெயில் - வெப்பத்தை தணிக்குமா கோடை மழை!

  பின்னர் நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில், பல்வேறு கேள்விகளுக்க கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பதிலளித்தார்.

  போட்டிக்கு ஒருநாள் முன்னாள் எப்படி உங்களை தாயார் படுத்தி கொள்வீர்கள்?

  போட்டிக்கு ஒருநாள் முன்னாள் போட்டி குறித்த மனநிலையை தயார் நிலையில் வைத்துக்கொள்வேன் என்று பதில் அளித்தார் பிரக்ஞானந்தா.

  பல நாடுகளுக்கு சென்றுள்ள உங்களுக்கு எந்த உணவு மிகவும் பிடிக்கும்?

  வெளிநாடுகளுக்கு சென்றாலும் இந்திய உணவுகளே எனது விருப்பம். அதற்கு அம்மா என் கூடவே பயணம் செய்து நம் வீட்டு உணவை சமைத்து கொடுப்பார் என்றார்.

  உங்களுக்கு ரோல்மாடல் யார்?

  அக்காவை பார்த்து தான் நான் விளையாட தொடங்கினேன். எனவே அவள்தான் எனது முதல் ரோல்மாடல் என்றார். வளர்ந்த பிறகு விஸ்வநாதன் ஆனந்த் என்னுடைய ரோல்மாடல் என்றார்.

  முதல் வெற்றி கடைசி வெற்றி எப்படி பாக்குறீங்க?

  இந்தியன் சாம்பியன்ஷிப் 2 வது இடம் பெற்றது முதல் வெற்றி. மகிழ்ச்சிதான் என்றார்.

  இளம் வீரர்களுக்கு உங்கள் அறிவுரை?

  போட்டியின் வெற்றி தோல்வியை சிந்திக்க வேண்டாம். மகிழ்ச்சியாக உங்கள் விளையாட்டை விளையாடுங்கள் இதுவே இளம் வீரர்களுக்கு என்னுடைய அறிவுரை என்றார் க்யூட்டாக.
  Published by:Suresh V
  First published:

  Tags: Chess, Praggnanandhaa

  அடுத்த செய்தி