Grama Sabha meetings | மே முதல் நாளான இன்று தமிழகத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்த தடை...

Grama Sabha meetings | மே முதல் நாளான இன்று தமிழகத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்த தடை...

கிராம சபை கூட்டம்

கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.

  • Share this:
    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக ஊரக வளர்ச்சி மற்றும் கிராம பஞ்சாயத்து துறை ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் இன்று நடைபெறவிருந்த கிராம சபைக்கூட்டங்களை ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். ஆண்டுதோறும் குடியரசு தினம், மே 1, சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

    மேலும் இந்த கிராம சபை கூட்டத்தின் தீர்மானங்களுக்கு சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... Tamil Nadu Assembly Election Results 2021: கரூரில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு...



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: