• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • டிக்டாக்குக்கு பதிலாக மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்திய பட்டதாரி இளைஞர்கள்...

டிக்டாக்குக்கு பதிலாக மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்திய பட்டதாரி இளைஞர்கள்...

திருப்பூர் இளைஞர்கள்

திருப்பூர் இளைஞர்கள்

டிக்டாக்குக்கு பதிலாக மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்தியுளனர் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள்.

  • Share this:

டிக்டாக்குக்கு பதிலாக மாற்று செயலியை அறிமுகப்படுத்தி அசத்தியுளனர் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள்.


இந்தியா சீனா எல்லை பதற்றம் காரணமாக சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதே நேரத்தில் சீன நிறுவனங்கள் வெளியிட்டுள்ள மொபைல்ஃபோன் செயலிகள் தகவல்களைத் திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது.

இதன் காரணமாக இத்தகைய புதிய செயலிகளை யாரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. டிக் டாக் செயலி இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலியாக இருந்து வந்தது.

Also read... மதுரை மக்கள் வீரத்தை விட விவேகத்துடன் செயல்பட வேண்டும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இதற்கு மாற்றாக பல செயலிகள் இருக்கும் பொழுதும் அவை டிக் டாக் அளவிற்கு சோபிக்கவில்லை. தற்பொழுது டிக்டாக்கிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பல செயலிகளும் அந்த இடத்தை பிடிக்க முனைப்பு காட்டி வரும் நிலையில் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இணைந்து டிக்டாக்கிற்கு மாற்றான சில்5 (chill5) என்ற  செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.

திருப்பூரை சேர்ந்த ஹரிஷ்குமார், சௌந்தரகுமார், சந்தீப், கோகுல், வெங்கடேஷ் என்ற 5 பேரும் இணைந்துதான் இந்த செயலியை வடிவமைத்துள்ளனர். பார்ப்பதற்கு டிக்டாக் போலவே காட்சி தரும் இந்த செயலி டிக்டாக் போலவே வீடியோ பதிவேற்றம், பரிமாற்றம் என பல அம்சங்கள் கொண்டுள்ளது.

தமிழக இளைஞர்கள் வடிவமைத்து என்பதால் இதனை மெருகேற்ற பயனாளர்கள் கொடுக்கும் புகார்கள் உடனடியாக மாற்றி அமைக்கப்பட்டு வருவதாகவும், கடந்த வாரம் அறிமுகம் செய்த நிலையில் தற்போது வரை 1000-க்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த செயலிக்கான சர்வர் தளம் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது எனவே தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: