’இந்துவாக மாறவேண்டும்.. இருபது லட்சம் வேண்டும்..’ - வரதட்சணை கொடுமையால் பட்டதாரி பெண் தற்கொலை என பெற்றோர் புகார்..
சென்னையில், திருமணமாகி ஓராண்டிலேயே, மத்திய உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மதம் மாறச் சொன்னது, வரதட்சணைக் கொடுமை ஆகியவை தான் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- News18 Tamil
- Last Updated: November 30, 2020, 11:09 AM IST
ஓராண்டுக்கு முன்பு திருமணமான நிகிதாவை, கிறி்ஸ்தவ மதத்தில் இருந்து இந்துவாக மாறும்படி வலியுறுத்திய கணவன் வீட்டார், 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர் என்கின்றனர் போலீசார். வாழப் பிடிக்கவில்லை; எனது சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதி வைத்து விட்டு நிகிதா தற்கொலை செய்து கொண்டதற்கு இதுதான் காரணமா?
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் 30 வயதான ஹரீஷ்குமார் - நிகிதா தம்பதி. மத்திய உளவுத் துறையில் பணியாற்றிய ஹரீஷ்குமாருக்கு சென்னைக்குப் பணியிட மாற்றம் கிடைத்தது. அதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தம்பதி, சென்னை பெசன்ட் நகரில் குடியேறினர். ஹரீஷ்குமார், அடையாறு ராஜாஜி பவனில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி படுக்கையறையில், நிகிதா தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், "இதற்கு மேல் என்னால் வாழ முடியாது. எனது சாவுக்கு யாரும் காரணமில்லை" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. சம்பவத்தன்று உளவுத்துறை அதிகாரி ஹரீஷ்குமாரும், அவரது தாய் ரமணியும் வீட்டில் இருந்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்கொலை செய்து கொண்ட நிகிதா பி.டெக் பட்டதாரி; ஹரீஷ்குமாருடனான திருமணம் குடும்பப் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்பட்டது. நிகிதா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்த நிலையிலும் வரதட்சணையாக 20 லட்சம் ரூபாய் கொடுத்தால் மதம் தடையல்ல என மணமகன் வீட்டார் கூறினர்.
அதனால் பெண் வீட்டார் 17 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்துள்ளனர். திருமணத்திற்குப் பின் வரதட்சணையில் பாக்கியுள்ள 3 லட்சம் ரூபாய் கேட்டு கணவன் வீட்டார் கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் நிகிதாவை இந்து மதத்திற்கு மாறும்படி வலியுறுத்தி வந்துள்ளனர். அதனால், திருமணம் முடிந்த ஒரு மாதத்திற்குப் பின் நிகிதா தனது பெற்றோர் வீட்டில்தான் வசித்து வந்துள்ளார்.
கடந்த மாதம் நிகிதாவின் பெற்றோர் சென்னைக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, நிகிதாவையும் ஹரீஷ்குமார் வீட்டில் விட்டுச் சென்றனர். இந்த நிலையில்தான் ஹரீஷைப் பார்ப்பதற்கு அவரது தாய் ரமணி மட்டும் கடந்த வாரம் சென்னை வந்துள்ளார்.அப்போதுதான் நிகிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதனை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் வரதட்ணைக் கொடுமை காரணமாக மகள் தற்கொலை செய்து கொண்டாக சாஸ்திரி நகர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
நிகிதா தற்கொலை வழக்கு விசாரணை ஒரு புறமிருக்க, ஆர்டிஓ விசாரணைக்கான பரிந்துரை ஆவணங்களை எடுத்துச் சென்ற சாஸ்திரி நகர் பெண் உதவி ஆய்வாளரை ஒருமையில் பேசி அவமதித்தாக திருமங்கலம் வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
நிகிதாவின் சடலத்திற்கு ராயப்பேட்டை மருத்துவமனையில் தான் உடற்கூறாய்வு நடத்தப்பட வேண்டும்.ஆனால் அங்கு பராமரிப்பு பணி நடப்பதால், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.அதனால் கிண்டி ஆர்டிஓ விசாரிக்காமல் திருமங்கலம் ஆர்டி ஓ விசாரிக்க ஆணை மாற்றப்பட்டது.அதற்கான ஆவணங்களை எடுத்துக் கொண்டு விசாரணை அதிகாரியான பெண் காவல் உதவி ஆய்வாளர் பாரதி, திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகம் சென்றுள்ளார்.
மேலும் படிக்க...ரஜினி கட்சி தொடங்குவார்’.. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் அரசியல் எதிர்பார்ப்பு.. நம்பிக்கையில் மக்கள் மன்ற உறுப்பினர்கள்.
அப்போது காவல் சீருடையில் இருந்த தன்னை அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன், ஒருமையில் பேசி அவமதித்ததாக, திருமங்கலம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் பாரதி புகாரளித்துள்ளார்.
வரதட்சனை கொடுமையால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டாரா என சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், திருமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலக வருவாய் ஆய்வாளர் மணிவண்ணன் அலைக்கழிப்பால் விசாரணை தாமதமாவதாக புகார்கள் எழுந்துள்ளன.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் 30 வயதான ஹரீஷ்குமார் - நிகிதா தம்பதி. மத்திய உளவுத் துறையில் பணியாற்றிய ஹரீஷ்குமாருக்கு சென்னைக்குப் பணியிட மாற்றம் கிடைத்தது. அதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தம்பதி, சென்னை பெசன்ட் நகரில் குடியேறினர். ஹரீஷ்குமார், அடையாறு ராஜாஜி பவனில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 25-ஆம் தேதி படுக்கையறையில், நிகிதா தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவர் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், "இதற்கு மேல் என்னால் வாழ முடியாது. எனது சாவுக்கு யாரும் காரணமில்லை" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. சம்பவத்தன்று உளவுத்துறை அதிகாரி ஹரீஷ்குமாரும், அவரது தாய் ரமணியும் வீட்டில் இருந்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.