நெல் நடவு செலவைக் குறைக்க புதிய கருவியை கண்டுபிடித்த தஞ்சை விவசாயி!

நெல் நடவு செலவைக் குறைக்க புதிய கருவியை கண்டுபிடித்த தஞ்சை விவசாயி!
நெல் நடவு இயந்திரம்
  • Share this:
தஞ்சாவூரில் நாற்று நடும் செலவை பாதியாக குறைக்கும் வகையில் விவசாயி ஒருவர் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தொழிற்பயிற்சி பட்டயப்படிப்பு முடித்துவிட்டு விவசாயத்துறையில் நுழைந்தாலும், 43 வயதிலும் அவர் படித்த படிப்பு கைகொடுத்துள்ளது. விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாமல், தாம் உள்பட ஏராளமான டெல்டா விவசாயிகள் அவதியுற்றுவந்த நிலையில், நடவு செலவைக் குறைக்க அவரது மனதில் புதிய எண்ணம் ஒன்று உதித்தது.

வீட்டில் பயன்பாடின்றி கிடந்த பிளாஸ்டிக் தட்டு, மரக்கட்டைகள், மர பலகை, ஊதுகுழல், கிரைண்டர் பெல்ட் போன்றவைகளை சேகரித்த அவர், ஏசியில் பயன்படுத்தப்படும் மோட்டாரைக் கொண்டு புதிய இயந்திரத்தை வடிவமைத்தார். நெல் விதைகளை இயந்திரத்தில் உள்ள அதற்கான இடத்தில் வைத்துவிட்டு, பேப்பர் ரோலை பொருத்தி இயக்கினால், 8 அங்குல இடைவெளியில் நெல் விதைகள் விழுந்து பேப்பர் ரோல் மூடிக்கொள்ளும்.


தண்ணீர் பாய்ச்சாமல் உழவு செய்யப்பட்டிருக்கும் வயலில் விதை நெல் கொண்ட பேப்பர் ரோலை சீரான இடைவெளியில் வைத்து, அதன் மேல் சிறிது மண்ணை பரப்பி, தண்ணீர் பாய்ச்சினால் நடவுப் பணி முடிந்துவிடும். வெறும் 2 பேரே நடவுப் பணியை முடித்துவிடலாம். இதன் மூலம் நடவு செலவு பாதியாக குறைவதோடு, நல்ல விளைச்சலும் கிடைப்பதாக கூறுகிறார் ரமேஷ்.
First published: June 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading