ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்கள் மைதானங்களை மறந்துவிட்டனர்.... நீதிமன்றத்தில் அரசு வாதம்

ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்கள் மைதானங்களை மறந்துவிட்டனர்.... நீதிமன்றத்தில் அரசு வாதம்

ஃப்ரீ ஃபையர் - பப்ஜி ஆன்லைன் விளையாட்டுகள்

ஃப்ரீ ஃபையர் - பப்ஜி ஆன்லைன் விளையாட்டுகள்

பொது நல வழக்கு நீதிபதிகள் R.மகாதேவன், J.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

தடை செய்யப்பட்ட FREE FIRE,  பப்ஜி உள்ளிட்ட  ஆன் லைன் விளையாட்டுகளை, மீண்டும் விளையாடுவதை  முற்றிலும் தடை செய்வது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம் மதுரை கிளை தாமாக முன் வந்து, தடை செய்யப்பட்ட ஆன் லைன் விளையாட்டுகளை முற்றிலும் தடை செய்வது குறித்தும்,  YOUTUBE சேனலில் வரும் தவறான வீடியோக்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக , பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்து. இது தொடர்பாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை பதிவாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில்,

1)இணையத்தில் உள்ள  VPN பயன்பாட்டை ஒழுங்கு படுத்த வேண்டும்.

2)YOUTUBE ல் வெளியாகும் முறையற்ற வீடியோ பதிவுகளை  வரைமுறை படுத்த வேண்டும். திருட்டு செயலிகள் மூலம் ஆன் லைன் விளையாட்டை விளையாடுவதை தடுக்க வேண்டும்.

தீபாவளி விடுமுறை... சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பேருந்துகளில் 1,10,000 பேர் முன்பதிவு

3)ஆன் லைன் விளையாட்டுகளை இணையத்தில் விளையாடாமல் தடுக்க,  மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4)அனைத்துப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இதுபோன்ற வன்முறையான ஆன்லைன் கேம்களை விளையாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த பொது நல வழக்கு நீதிபதிகள் R.மகாதேவன்,  J.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ‘மாணவர்கள்,  விளையாட்டு மைதானங்களை மறந்து விட்டு,  ஆன் லைன் விளையாட்டுகளில் முழ்கி கிடக்கின்றனர்.  சீனா பல ஆன் லைன் விளையாட்டுகளை, ஆப்களை பிற நாடுகளுக்கு வெளியிடுகிறது.  ஆனால்,  சீனாவில் தடை செய்யப்பட்டு உள்ளது.’ என வாதிட்டார்.

அரசு மருத்துவமனையில் மருந்துகளுக்கு உறை கொடுங்கள்.. நோயாளிகளை குழப்பாதீர்கள் - சீமான வலியுறுத்தல்

நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மற்றும் தடை செய்ய வேண்டும் என ஆர்வமுள்ள வழக்கறிஞர்கள் கூறுகையில், ‘சிங்கப்பூரில்,  ஒரு முறை தடை செய்யப்பட்ட விளையாட்டுகளை,  மீண்டும் இணையத்தில் விளையாடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. பல வழிமுறைகள் உள்ளன.  நாள்தோறும் ஆன் லைன் விளையாட்டுகளால் பாதிக்கப்பட்டோர் , தற்கொலை செய்து கொண்டு வாழ்வை தொலைத்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது, எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வாதிட்டார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள்,தேச நலன் கருதி நாட்டின் வருங்கால தலைமுறையினரின்  வாழ்வதாரத்தை, வளர்ச்சியை  காக்கும் வகையில் தடை செய்யப்பட்ட  ஆன் விளையாட்டுகளை முற்றிலும் மீண்டும் விளையாடாமல்  தடை செய்ய மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட FREE FIRE,  பப்ஜி உள்ளிட்ட  ஆன் லைன் விளையாட்டுகளை, மீண்டும் விளையாடுவதை  முற்றிலும் தடை செய்வது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

தடை செய்யப்பட்ட ஆன் லைன் விளையாட்டுகளை,  மீண்டும் விளையாடாமல்  சிங்கப்பூர்,  சீனா உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ஆர்வமுள்ள வழக்கறிஞர்கள்  உள்ளிட்டோர் தேவையான ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 27 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Published by:Musthak
First published:

Tags: Madurai High Court, Online Game PUBG