அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா?

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்றுமா?
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில நிர்வாகி பெருமாள் பிள்ளை
  • News18
  • Last Updated: August 6, 2020, 11:57 AM IST
  • Share this:
ஊதிய உயர்வு, அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஆண்டு தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அரசு உறுதியளித்த பின்னர் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது . போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களில் 118 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கடந்த மாதம் அவர்களது பணி மாறுதல் உத்தரவுகள் திரும்பப்பெறப்பட்டன. ஆனால் ஊதிய உயர்வு குறித்து எந்த அறிவிப்பையும் அரசு அறிவிக்கவில்லை.

Also read... ஒரே ஆண்டில் 212 சூழலியல் ஆர்வலர்கள் படுகொலை - குளோபல் விட்னஸ் அமைப்பு அறிக்கை


கொரோனா காலத்தில் அயராது உழைக்கும் அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அரசு தற்போது பரிசீலிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில நிர்வாகி பெருமாள் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா, டெங்கு, இயற்கை பேரிட உள்ளிட்ட வருடம் முழுவதும் அரசுக்கு துணை நிற்கும் அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்துக்காக கையேந்த வைப்பது சுகாதாரத்துறை அமைச்சருக்கு அழகா? மற்ற மாநிலங்களில் எல்லாம் மருத்துவர்களுக்கு அரசு தாமாகவே முன் வந்து ஊதியம் , இங்கே மருத்துவமனை வாசலில் 3 முறை சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட பிறகும் சுகாதாரத்துறை அமைச்சரின் மனசாட்சியை தட்டி எழுப்ப முடியாதது ஏன் என அவர் கூறுகிறார்.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading