• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தனியார் சிமெண்ட் விலையை விட அரசின் ‘வலிமை’ சிமெண்ட் ரூ.90 குறைவு: அமைச்சர் தங்கம் தென்னரசு

தனியார் சிமெண்ட் விலையை விட அரசின் ‘வலிமை’ சிமெண்ட் ரூ.90 குறைவு: அமைச்சர் தங்கம் தென்னரசு

தனியார் சிமெண்ட் விலையை விட அரசின் ‘வலிமை’ சிமெண்ட் ரூ.90 குறைவு: அமைச்சர் தங்கம் தென்னரசு

தனியார் சிமெண்ட் விலையை விட அரசின் ‘வலிமை’ சிமெண்ட் ரூ.90 குறைவு: அமைச்சர் தங்கம் தென்னரசு

அரசின் ‘வலிமை’ சிமெண்ட், தனியார் சிமெண்ட்டின் விலையை விட ரூ.90 குறைவாகவும், தரமானதாகவும் இருக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

  • Share this:
    வரலாறு காணாத அளவுக்கு கட்டுமானப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் ஓரிரு வாரங்களில் சிமெண்ட் விலை குறையும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

    கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தனியார் சிமெண்ட் மூட்டை ஒன்றின் விலை 420 முதல் 450 ரூபாயாக இருந்தது. இந்த விலை ஜூன் மாதத்தில் 470 முதல் 490 ரூபாயாக உயர்ந்தது. விலை ஏற்றம் குறித்து ஜுன் 14ம் தேதி தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது, இதனால் சிமெண்ட் விலை 20 முதல் 40 ரூபாய் குறைக்க உடன்பாடு எட்டப்பட்டு, விலை குறைந்தது.

    தற்போதைய விலையான 440 ரூபாய் என்பது மார்ச் மாத விற்பனை விலையை விட 4.7 விழுக்காடு அதிகமாகும். தனியார் சிமெண்ட்டின் விலையைவிட 90 ரூபாய் விலை குறைவாகவும், தரமாகவும் அரசு சிமெண்ட் விற்கப்படுவதாக அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் அவர் குறிப்பிடுகையில், அரசு சிமெண்டின் விற்பனையை அதிகரிக்க வலிமை என்ற பெயரில் புதிய சிமெண்ட் ஓரிரு வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், டான்செம் நிறுவனம் மூலம் அரசு சிமெண்ட் என்ற பெயரில் மாதம் ஒன்றுக்கு ஏற்கனவே 90 ஆயிரம் மெட்ரிக் டன் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    கூடுதலாக 30 ஆயிரம் மெட்ரிக் டன் அளவு சிமெண்ட் வெளிசந்தைக்கு வலிமை என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், வலிமை சிமெண்ட் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வந்தால் தமிழகத்தில் சிமெண்ட் சில்லரை விற்பனை விலை மேலும் குறையும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: